காதலிப்போமா?????

 

 

 

 

 

காதல் தினம் 2008

Advertisements

February 14, 2009 at 12:08 pm 26 comments

தாள முடியாத கோவம். பொங்கி வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்ளும் அக்கறை இல்லை.  நாற்காலியை எத்தியதில் ஒற்றைக் கால் முறிந்து முக்காலியானதில் கொஞ்சமும் வருத்தமில்லை. இன்னமும் தனியாத கோவம். காற்றின் மூலக்கூறுகளை வேகமாக காலால் பந்தாடுகிறேன். மேஜையில் எப்போதாவது என் எண்ணங்களை நான் சிறை வைக்கும் நாளேடு. காற்றின் ஒரு அலை மெல்லியதாய் அதை வருட, முதல் பக்கத்தைத் தொடர்ந்து வரிசையாக பக்கங்கள் புரளத் துவங்கியன. கம்பிகளுக்கு பின்னால் இருந்து என்னை உற்றுப் பார்க்கும் கைதியாய் வருடங்களுக்கு முன்னால் ஆயுள் கைதியான என் எண்ணங்கள் கோடுகளுக்கு நடுவே தலை நீட்டி விடுதலை கேட்டுக் கெஞ்சுகின்றன.

(more…)

December 31, 2008 at 11:17 am 55 comments

நாணத்தில் மெலிந்த காதல்

நான் முத்தம் எழுதப் பழகும்
காகிதமே உன் கன்னங்கள்…
முதல் எழுத்தென்ன
கோட்டிலா இருக்கும்?
கொஞ்ச காலம்
உதட்டில் வாங்கிக்கொள்ளேன்.

*

வாழ்நாளின் கடைசி நிமிடங்களை
சுகமாய் கூந்தலில் சுகிக்கும்
மல்லிகளுக்கு ஒன்று,
(more…)

December 10, 2008 at 11:13 am 74 comments

காதலித்துவிட்டு போகிறேனே

“எனக்கே தெரியாமல் தூக்கத்தில் இறந்துவிடுவேன்” என்கிற அற்பசந்தோஷத்தில் படுக்கைக்கு போவதும், விடியலில் “ஏதோ ஒரு சின்ன ஊடல், இன்று பேசிவிடுவாள்” என்ற நம்பிக்கையில் எழுபவனுமாக இருந்துவிட்டேன் கடந்த சில வருடங்களாய். ஏனோ இந்த கணம் எனக்குள் வேரூன்றத்தொடங்கிற்று உருவமில்லா ஒரு அசெளகரியம். பிரிவுகள் சில நேரம் எதிர்பாராமல் நடந்தேறிவிடுகின்றன. நினைவுகளில் இருந்து இன்னும் உன்னை ஷேராட்டோவில் ஏற்றி திரும்பி பாராமல் நடந்த அந்த அந்தி மட்டும் விலக மறுத்து புத்தி முழுதும் வியாபித்திருக்கிறது. பிரிவுக்கு காரணம் ஏராளம் கற்பிக்க முடியும் மூளையால். ஏற்றுக்கொள்ள விருப்பமற்ற மனம் “காதலிக்கிறேன் தொந்தரவு செய்யாதே!” என்கிறது. புரிய வைக்க வேண்டியவன் நான். எனக்கு பிரிவுக்கான காரணம் தர வேண்டியவள் நீ.

(more…)

November 12, 2008 at 11:13 am 70 comments

ர(ம)யில் காதலன்

முன்னிருக்கையின் உன்னை,
கணப்பொழுது கடந்து போகும்
தெருவிளக்குகளின் வெளிட்சம்
கடன் வாங்கி,
கண்களால் திருடும் நேரம்
ரயில் பயணங்கள் சுகமானவை தாம்.

*

பெட்டியின் முன்பதிவு பட்டியலில்
நண்பன் பார்க்கும் முன்
(more…)

November 5, 2008 at 9:20 am 39 comments

இவன்து ஓவர் பிலிமா இருக்கே!

பிலிமு காட்ட கூப்டது நம்ம “பின்புலி” ஜி.

முன் குறிப்பு: இந்த வாரம் புதன் கிழமை கவிதை உண்டு. உசாரய்யா உசாரே….. 🙂

படங்கள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் அதனுள் நம்மை ஒட்ட வைக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து ஆரம்பம் தொட்டே. அதனால் தான் திரையை பார்த்து வணக்கம் சொல்வது, கார் கதவு தானாகவே திறப்பது போன்ற காட்சிகள் சின்ன வயது முதலே பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. குணா பார்த்து கொண்டே அம்மாவிடம் “கமல் செத்துட்டானே இனிமே கமல் படம் வராதா?” என்றவ‌னுக்கு படம் வெறும் நிழல் என அப்போதே புரிய வைத்ததால், அந்த நிழலில் எது உண்மையாக தெரிகின்றது என்று ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய திரை சார்ந்த பார்வை நிச்சயம் பலருக்கு சுவாரசியமாக இருக்காது என்பது என் கருத்து. மீதமுள்ளவை கீழே:

(more…)

November 3, 2008 at 12:24 pm 19 comments

கம்பூட்டர் மூஞ்சில யாரு?

அடுத்து ஒரு தொடர் வெளாட்டுங்க. வெளாடுறதே இந்த பசங்களுக்கு வேலையாப் போச்சு. இந்த முறை கூப்டுகீறது ஸ்ரீமதி. சப்ப ஆட்டம் தான். கம்பூட்டர் மூஞ்சில யாரு? யப்பா இப்போ ஆரம்பிச்சிருக்கீங்களே தொடர் விளையாட்டு எதிர்த்து ஒரு ஆட்டம் அதுல என்னையும் சேத்துக்கோங்கப்பு. கொஞ்ச நாளா சரியான கரு கிடைக்காத்தால் லீவு விட்டுட்டேன். அல்லாரும் சந்தோசமா இருப்பீங்க. ரொம்ப குசி ஆயிடாதீங்கப்பு நான் அப்பீட்டாகலை, கொஞ்ச நாள்ள ரிப்பீட்டாயிடுவேன். சரி இப்போ கதைக்கு வருவோம்.

(more…)

October 22, 2008 at 1:46 pm 31 comments

Older Posts


Categories

  • Blogroll

  • Feeds